2025 ஜூலை 14, திங்கட்கிழமை

தீக்காயங்களுடன் பெண் வைத்தியசாலையில் அனுமதி

Kogilavani   / 2017 செப்டெம்பர் 18 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலாத்துஓயா, நவநெலிய பிரதேசத்திலுள்ள வீடொன்றில்,  குப்பி லாம்பு கவிழ்ந்ததால் பெண்ணொருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பிரதேசத்தை  சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயே (வயது 54) இவ்வாறு தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். இவர் மேலதிக சிகிச்சைக்காக, கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளாரென வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மின்சார சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக, தலாத்துஓயா, நவநெலிய பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பிரதேச மக்கள் மண்ணெண்ணெய் விளக்குளையே பயன்படுத்தி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .