R.Maheshwary / 2022 பெப்ரவரி 06 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
மஹாவலி ஆற்றின் பிரதான கிளை ஆறுகளில் ஒன்றான ஹட்டன் ஓயாவுக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட தீபரவலால் 50 ஏக்கர் வனப்பகுதி எரிந்து சாம்பலாகியுள்ளது.
நேற்று (5) மாலை 4 மணியளவில் ஹட்டன்- டன்பார் தோட்டத்திலுள்ள குறித்த வனப்பகுதியில் ஏற்பட்ட தீபரவல், இன்று அதிகாலை வரை எரிந்ததாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த வனப்பகுதிக்கு கீழே பல தோட்டங்கள் உள்ள நிலையில், அங்கு வசிப்பவர்களுக்கான குடிநீர் இந்த வனப்பகுதியிலிருந்தே விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், மத்திய மலை நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவும் வரட்சியுடனான வானிலையைப் பயன்படுத்தி, சில விஷமிகள் இவ்வாறு வனப்பகுதிகளுக்கு தீவைப்பதாகவும் இதனால் மலையகத்தின் பல இடங்களில் குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
10 minute ago
16 minute ago
17 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
16 minute ago
17 minute ago
18 minute ago