Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Gavitha / 2020 நவம்பர் 09 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ, சுதத் எச்.எம்.ஹேவா
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், இன்று (09), மற்றைய மாவட்டங்களில் இருந்து ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டப் பகுதிகளுக்கு வருகை தருவேரை, சொந்த வீடுகளிலேயே தனிமைப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என, ஹட்டன் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி விஜிதா அல்விஸ் தெரிவித்தார்.
ஹட்டனில் இருந்து கொழும்பு உள்ளிட்ட பல வெளிமாவட்டங்களுக்குச் சென்று, பலர் தொழில் புரிந்து வருகின்றனர் என்றும் இதில் பலர், இம்மாதம் 14ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள தீபாவளிப் பண்டிகைக்காக, தத்தமது வீடுகளுக்கு வருகை தருவர் என்றும், அவ்வாறு வருகை தருபவர்கள், வந்தவுடன், தத்தமது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுவர் என்று அவர் தெரிவித்தார்.
இதற்காக, நேற்று (08), கினிகத்தேனை, தியகலா, பொகவந்தலாவ ஆகிய பகுதிகளில் சாலைத் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் இதன்மூலம், சொந்த வீடுகளுக்கு வருவோர் இனங்காணப்பட்டு, சுய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, சொந்த வீடுகளுக்கு வருபவர்களைத் தவிர, வேறு வெளிமாவட்டங்களைச் சேர்ந்த எவரும், சாலைத் தடைகளைத் தாண்டி அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவ்வாறு யார் வந்தாலும் அவர்கள திருப்பி அனுப்பி வைக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக, ஹட்டன், பொகவந்தலாவ, கினிகத்தேன, மஸ்கெலியா, நோட்டன் பிரிட்ஜ், நல்லதண்ணி, நோர்வூட், வட்டவளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
37 minute ago
1 hours ago
1 hours ago