ஆ.ரமேஸ் / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட நகர வியாபார நிலையங்களில், தீயணைப்பு வாயு இயந்திரங்கள் கட்டாயமாக வைத்திருக்கப்படல் வேண்டும் என்ற உத்தரவு தொடர்பாக கடிதம், இன்னும் ஓரிரு தினங்களில் அனுப்பி வைக்கப்படவுள்ளது என, நோர்வூட் பிரதேச சபைத் தவிசாளர் குழந்தை ரவி தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
அந்தந்த வியாபார நிலையங்களுக்கு, தீயணைப்பு வாயு இந்திரங்களைக் கொள்வனவு செய்துகொள்வதற்காக, வியாபார உரிமையாளர்களுக்கு, எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை காலக்கெடு வழங்கப்படவுள்ளது என்று அவர் கூறினார்.
நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட நகரத்திலுள்ள வியாபார நிலையங்களை, தீ விபத்துகளிலிருந்து பாதுகாப்பும் முகமாகவே, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக, இம்மாதத்துக்கான அமர்வின்போது, பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டு, அதை சபை உறுப்பினர்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர் என்றும் அவர் கூறினார்.
அண்மைக்காலமாக, நாட்டின் பல இடங்களிலும், வியாபார நிலையங்களில் தீ விபத்து ஏற்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த நிலைமை, நோர்வூட் வியாபார நிலையங்களுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்றும் அதற்கு முன்னெடுச்சரிக்கையாக இருக்கும் வகையிலேயே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்த இயந்திரத்தை கொள்வனவு செய்வதற்கு, பொருளாதார சிக்கலுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்பதற்காகவே, நான்கு மாதகால அவசாகம் வழங்கப்பட்டுள்ளது என்றும் நான்கு மாதத்துக்கு பின்னர், இந்த இயந்திரங்கள் வியாபார நிலையங்களில் வைக்கப்படாவிடின், பிரதேச சபையால் வழங்கப்பட்டுள்ள வியாபார சான்றிதழ்கள் இரத்து செய்யப்படும் என்றும் இதன்போது அவர் எச்சரிக்கை விடுத்தார்.
59 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago
4 hours ago