R.Maheshwary / 2021 செப்டெம்பர் 21 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணதிலக
கொஸ்லந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிவல்கதுர- ரோஸ்பெரி தோட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், எரியும் குப்பையில் தவறிவிழுந்து உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் ரோஸ்பெரி தோட்டத்தைச் சேர்ந்த 30 வயதான சிவராஜ் ரவிச்சந்திரன் என கொஸ்லாந்தை பொலிஸார் தெரிவித்துள்னர்.
இந்த மாதம் 14ஆம் திகதி தனது தோட்டத்தை துப்பரவு செய்த குறித்த இளைஞன், சேகரித்த கழிவுகளை தீமூட்டி எரித்துள்ளதுடன், அதற்கு அருகிலிருந்த மரத்தின் மீதேறி கிளைகளை வெட்டியபோதே தவறி தீயில் விழுந்துள்ளார்.
இதன் பின்னர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், வெல்லவாய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
கடந்த 6 நாள்களாக மொனராகலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று (20) உயிரிழந்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .