Editorial / 2024 டிசெம்பர் 22 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹாலிஎல கலௌட பூலுகஹமட ஏரியில் மிதந்து கொண்டிருந்த பெண்ணொருவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (22) மீட்கப்பட்டுள்ளதாக கந்தேகெதர பொலிஸார் தெரிவித்தனர்.
உதேனிகம, ஹாலிஎல, கலௌடாவில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தாயான ஆர்.டி.தம்மிக்க லதா (42) என்பவரின் சடலம் என உயிரிழந்தவரின் கணவர் அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் சில காலம் சுகயீனத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 18ஆம் திகதி காலை முதல் அவர் வீட்டில் இருந்து காணவில்லை எனவும் அவரது கணவர் கந்தேகெதர பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிடைத்த தகவலின் அடிப்படையில், புலுகஹாமதேவ பிரதேசத்தில் இந்த பெண்ணின் சடலம் மிதந்த போது சடலம் வீங்கி துர்நாற்றம் வீசியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago