2026 மே 07, வியாழக்கிழமை

தூணில் கட்டப்பட்டு இளைஞனுக்கு துன்புறுத்தல்

Editorial   / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

இரத்தினபுரி நகரில், இளைஞன் ஒருவரை தூணில் கட்டிவைத்து துன்புறுத்திய சம்பவம் தொடர்பான விசாரணைகளை, பொலிஸால் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம், இரத்தினபுரி நகரிலுள்ள பிரதான பாடசாலையொன்றுக்கு அருகில் நேற்று (23) நடைபெற்றுள்ளது என்றும் இது தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதும், பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தரவில்லை என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த சில இளைஞர்கள், குறித்த இளைஞனை மீட்டிருந்தனர் என்றும் பின்னர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டிருந்தனர் என்றும் தெரியவருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .