2026 மே 09, சனிக்கிழமை

dd

’தூரநோக்குடன் செயற்பட்டிருந்தால் சமூக மாற்றத்தை நோக்கிப் பயணித்திருக்கலாம்’

Editorial   / 2019 செப்டெம்பர் 13 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மலையகத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்ட கையோடு கிடைத்திருக்கவேண்டிய உரிமைகளைக்கூட, தமிழ் முற்போக்குக் கூட்டணியே தற்போது பெற்றுக்கொடுத்து வருவதாகவும்  மலையக அரசியல் தலைமைகள் அன்று தூரநோக்கு சிந்தனையின் அடிப்படையில் செயற்பட்டிருந்தால்,  இந்நேரம் முழுமையானதொரு சமூக மாற்றத்தை நோக்கிப் பயணித்திருக்கலாம் என்றும், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

நாவலப்பிட்டியவில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மக்கள் மயப்படுத்தும் நிகழ்வில் (12) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,  தமிழ் முற்போக்குக் கூட்டணி உதயமாகியதன் பின்னரே, மலையகத் தமிழர்களுக்கு உரிமை அரசியலையும் முழுமையாக அனுபவிக்ககூடிய சூழ்நிலை உதயமாகியதாகவும்  நிலவுரிமை, வீட்டுரிமை ஆகியவற்றை கூட்டணி பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

லயன் யுகத்துக்கு முடிவு கட்டும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் வெகுவிரைவில் அதனை வெற்றிகரமாக நிறைவேற்றி முடிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆனால் ஒரு சிலர் இன்னும் தாத்தாச் சுட்ட வடையையே சுட்டுக்கொண்டிருக்கின்றனர் என்று விமர்சித்ததுடன்,   இனியும் மக்கள் மத்தியில் பழையப் பல்லவி எடுபடாது என்றும் தெரிவித்தார்.

ஏனெனில் முடியும் என்பதை, தமிழ் முற்போக்குக் கூட்டணி  நான்கரை வருட காலப்பகுதியில் செய்கைமூலம் உறுதிப்படுத்தவிட்டதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .