எம். செல்வராஜா / 2020 ஜனவரி 29 , பி.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், எதிர்வரும் 2ஆம் திகதி, தென்கொரியாவுக்குப் பயணமாகவுள்ளார்.
தென்கொரியாவின் தலைநகரான சியோலின் சமூக மேம்பாட்டு விடுதியில் நடைபெறும் சர்வதேச சமாதானப் பேரவையின் மநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டே, இவர் அந்நாட்டுக்குச் செல்லவுள்ளார்.
ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தின் நியூயோர்க் நகரில் இயங்கும் சர்வதேச சமாதானப் பேரவையின் தலைவர் பேராசிரியர் தோமஸ் ஜீ. வோல்ஸ், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமாரை கலந்து கொள்ளுமாறு, அவருக்கு விசேட அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அழைப்பை ஏற்றே, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், இம் மகாநாட்டில் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
“உலக சமாதான மாநாடு 2020” எனும் தொனிப்பொருளுக்குக் கீழ், இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாடு, தென்கொரியாவின் தலைநகரான சியோலின் சமூக மேம்பாட்டு விடுதியில், எதிர்வரும் 3அம் திகதி ஆரம்பமாகி, எதிர்வரும் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர், 9ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார்.
6 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
6 hours ago
09 May 2026