Editorial / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
நதீக தயா பண்டார
சுமார் 80 வருடகாலமாக, கண்டி- தேக்கவத்தை பகுதியிலுள்ள குப்பைமேட்டில் கழிவுகள் கொட்டப்படுவதால், சுற்றுசூழல் பாதிப்புகள் ஏற்படுவதாக, அப்பகுதிவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், நகரில் சேகரிக்கப்படும் கழிவுகள் யாவும் இங்கு எடுத்துவரப்பட்டு கொட்டப்படுவதால், பல்வேறு நோய்த் தாக்கங்களுக்கு முகம்கொடுக்க நேடுவதாக, அதனை சூழவுள்ள மக்கள், மத்திய மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோனிடம் முறையிட்டுள்ளனர்.
பிரதேச மக்களின் கோரிக்கைக்கமைய, குறித்த இடத்துக்குச் சென்று ஆளுநர் பார்வையிட்டுள்ளதுடன், சுகாதார ரீதியில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், கழிவகற்றல் செயற்பாட்டை முன்னெடுக்குமாறு, உரிய தரப்பினருக்கு ஆளுநர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
காலனித்துவ ஆட்சியின்போது, 33 ஏக்கர் பரப்புடைய இக்காணியில் தொழுநோய் மருத்துவமனை இயங்கி வந்துள்ளது. இதனையடுத்து, 80 களுக்குப் பின்னர் 1933 ஆம் ஆண்டு தொடக்கம் கண்டி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை கொட்டும் இடமாக மாற்றம்பெற்றது.
குறித்த இடத்தில் நீண்டகாலமாக கழிவுகள் கொட்டப்பட்டுவருவதால், தற்போது மக்கள் சுகாதார ரீதியில் பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளனரென தெரிவிக்கப்படுகிறது.
கழிவுகள் அதிகமாக குவிந்து மேடாகியுள்ளதால், அங்கிருந்து கழிவு கீழிறங்கி மகாவலி கங்கையுடன் கலப்பதாக, பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கழிவுகள் தரம் பிரித்து கொண்டுவரப்பட்டாலும், இங்கு அவ்வாறு வெவ்வேறாக கொட்டப்படுவதில்லை எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமல்லாது, குறித்த கழிவு தொட்டியிலிருந்து பொலித்தீன் போன்ற கழிவுகளை, பறவைகள், விலங்குகள் வெளியிடங்களுக்கு எடுத்துவருவதாகவும், ஆங்காங்கே அவை போட்டுவிடுவதால், துர்நாற்றம் வீசுதோடு ,சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மழைக் காலங்களில் கழிவுகளுடன் கசியும் நீரானது, மகாவலி கங்கையில் சேர்வதாக மக்கள் தெரிவிப்பதுடன், வேறு சில நீர் நிலைகளிலும் கழிவுகள் கலப்பதாக தெரிவிக்கின்றனர்.
இதன்காரணமாக, பொல்வத்த, வேகிரிய, ரத்மலே, பான்வெல்கொல்ல, கொஹோகொட , மடபதகம, ஹல்ஒலுவ, வட்டாரந்தென்ன, லெவுல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சரும நோய்களை எதிர்நோக்கியுள்ளனரென தெரிவிக்கப்படுகிறது.
39 minute ago
51 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
51 minute ago
2 hours ago
3 hours ago