2026 ஜனவரி 21, புதன்கிழமை

தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் ஊழியர்களுக்குப் பிசிஆர் பரிசோதனை

Kogilavani   / 2021 மே 12 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

தலவாக்கலை தேயிலை ஆராயச்சி  நிலையத்தின் ஊழியர்கள் மற்றும் சென்கூம்ஸ் தோட்டத் தொழிலாளர்களுக்கு, இன்றை(12) தினம் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதாக, லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி ஜனாத் அபேகுனரத்ன தெரிவித்தார்.

தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் சென்கூம்ஸ் தோட்டத்தின் தொழிலாளர்கள் என 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து கடந்த 8ஆம் திகதி முதல் சென்கூம்ஸ் கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டது.

இதன்போது தொற்றாளர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையிலேயே, இன்று 150 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

தற்போது இப்பகுதியில் 300 க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் மேற்படி அதிகாரி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X