Mayu / 2024 ஜூன் 19 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹொரணையில் இருந்து நுவரெலியா நோக்கி சென்ற கார் ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் குயில்வத்த பகுதியில் தேயிலை செடிக்குள் புகுந்து புதன்கிழமை (19) அதிகாலை 5.15 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் குறித்த காரில் பயணம் மேற்கொண்டிருந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது சாரதியின் நித்திரை கலக்கத்தினால் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தில் காரில் பயணம் செய்த யாருக்கும் காயம் ஏற்படவில்லையெனவும் கார் பலத்த சேதமடைந்துள்ளதால் விபத்து குறித்து ஹட்டன் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ரஞ்சித் ராஜபக்க்ஷ



7 minute ago
24 minute ago
28 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
24 minute ago
28 minute ago
41 minute ago