Editorial / 2019 ஒக்டோபர் 21 , பி.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள தேயிலைத் தோட்டங்கள் பல மூடப்பட்டு வருவதாகவும் எதிர்காலத்தில் மேலும் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு விடும் அபாய நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
99 வருட கால குத்தகைக்கு இத்தோட்டங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், இதன் பராமரிப்பு குறித்து கம்பனி நிர்வாகம் அலட்சியமாக இருப்பதே இதற்கு காரணம் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான தோட்டங்கள் காடுகளாகக் காணப்படுவதாகவும் தொழிற்சாலை இயந்திரங்கள் பழுதடைந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலைமை காரணமாக, தேயிலை தொழிற்றுறை முற்றாக ஸ்தம்பிக்கலாம் என்று தேயிலை தொழிற்றுறையைச் சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, 99 வருட குத்தகைக்கு வழங்கப்படடுள்ள தோட்டங்களின் குத்தகை ஒப்பந்தங்கள் குறித்து மீள்பரிசீலனை செய்து, தோட்டத்துறை ஆரோக்கியமான முறையில் செயற்படுவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படல் வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
2 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago