Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2017 செப்டெம்பர் 10 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
தேயிலைக் காணியில் சோளம் பயிரிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, லிந்துலை, ஹென்போல்ட் தோட்டத் தொழிலாளர்கள், தோட்டத்திலுள்ள கொழுந்து மடுவத்துக்கு முன்பாக, இன்றுக் காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மேலும் கூறுகையில்,
ஹென்போல்ட் தோட்டத்தில், 8 ஏக்கர் அளவான தேயிலை மலைகளை, தோட்ட நிர்வாகம் முறையாக பராமரிக்காமல் காடாக்கியுள்ளது.
அத்துடன், இந்தத் தோட்டத்தில் நல்ல விளைச்சலைத் தந்துவந்த 05 ஏக்கர் தேயிலை மலையை, குத்தகை அடிப்படையில், தனியாருக்கு விவசாயம் செய்யவும் 2010ஆம் ஆண்டு வழங்கியுள்ளது. இந்தக் காணியின் குத்தகை முடிந்த பின்னர், மீண்டும் தேயிலைக் கன்றுகள் நாட்டப்படும் என்றும் தோட்ட நிர்வாகம் எமக்கு உறுதிமொழி வழங்கியிருந்தது.
இந்நிலையில், 5 வருடங்கள் குத்தகை முடிந்தப் பின்னர், மீண்டும் குறித்த மலைகளை மீளப்பெற்று தேயிலை கன்றுகள் போடாமல் தோட்ட நிர்வாகம் அந்தக் காணிகளை கைவிட்டுள்ளது. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது.
தற்போது தோட்ட நிர்வாகமானது, தேயிலை மலைகளில் சோளத்தை பயிரிட நடவடிக்கைகைள மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறு சோளம் பயிரிடப்படுமனால், தேயிலைத் துறையை நம்பி வாழ்ந்து வரும் எமது பொருளாதாரம் பாதிப்படையும். நாங்கள் தொழிலை இழக்கும் நிலைக்குத் தள்ளளப்படும்வோம்” என்று தெரிவித்தனர்.
இதேவேளை, தேயிலைத் தோட்டங்கள் மூடப்படுவதால் வேலை நாட்கள் குறைக்கப்படுவதுடன், மாதாந்த சம்பளமாக 2,000- 4,000 ரூபாய் வரையே பெற்றுக்கொள்ள நேரிடுவதாகவும், இந்த சம்பளத்தை வைத்து வாழ்க்கையை எவ்வாறுக் கொண்டு நடத்துவது என்றும் தொழிலாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago