R.Maheshwary / 2023 பெப்ரவரி 26 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்ளூராட்சி சபைத் தேர்தலை உரிய தினத்தில் நடத்துமாறு தெரிவித்து தலவாக்கலை மற்றும் மஸ்கெலியா ஆகிய நகரங்களில் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
இதற்கமைய, தலவாக்கலை நகரில் நேற்று (25) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் அசோக சேபாலவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்போராட்டத்தில் கட்சி செயற்பாட்டாளர்களும், மக்களும் கலந்துகொண்டனர்.
" தேர்தலை ஒத்திவைத்து மக்கள் சாபத்துக்கு உள்ளாகாதே, தேர்தலை உடன் நடத்து, மனித உரிமைகளைமீறி சர்வாதிகார ஆட்சி செய்யாதே, பொருட்களின் விலையை குறை" என்பன உட்பட பல கோஷங்கள் எழுப்பட்டன.
அத்துடன், தமது கோரிக்கைகளை பதாகைகளில் எழுதி அவற்றை தாங்கிபிடித்தவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை புதிய இலங்கை சுதந்திர கட்சியின் ஊடாக மஸ்கெலியா பிரதேச சபைக்கு போட்டியிட இருந்த வேட்பாளர்கள் உடனடியாக தேர்தலை நடாத்த வேண்டும் என கோரி விடுத்து அமைதி வழி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று (25) மஸ்கெலியாவில் நடத்தப்பட்டது.
மஸ்கெலியா - நல்லத்தண்ணீர் சந்தியில் இந்த அமைதிவழி கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago