2026 மே 09, சனிக்கிழமை

dd

தேர்தல் பிரசார காரியாலயம் திறப்பு

Editorial   / 2020 ஜனவரி 31 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்

 

நுவரெலியாவில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரசார காரியாலயம் ஒன்று வைபரீதியாக  தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் தலைமையில், நேற்று (30) திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், தொழிலாளர் தேசிய சங்கத்தின் சிரேஷ்ட ஆலோசகர் வீ.புத்திரசிகாணி உட்பட கட்சியின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.  

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முகம் கொடுக்கும் வகையில், தேர்தல் பிரசாரப் பணிகளை முன்னெடுக்கும் நோக்கில், இந்தக் காரியாலயம் திறந்து வைக்கபட்டுள்ளதுது.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்கள் தேவைகளுக்காக, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் முன்னால் அமைச்சர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இந்தக் காரியாலயத்தில் சந்திக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையிலுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .