2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

தையல் கடையில் தீ

Gavitha   / 2021 மார்ச் 07 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

ஹட்டன், டிக்கோயா – தரவளை பகுதியில், தையல் நிலையமொன்றில், நேற்று (06) இரவு ஏற்பட்ட தீ விபத்தில், அக்கடை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

திடீரென ஏற்பட்ட இந்தத் தீ விபத்தை அயலவர்கள் இணைந்து கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வர முயன்றபோதும், ஆடை தைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த துணிகள், தையல் இயந்திரங்கள் தீயில் எரிந்து நாசமாகியது.

கடை உரிமையாளர்கள் ஆலயத்துக்குச் சென்றிருந்தனர் என்றும் இதன்போது சிறுவர்கள் மேல் மாடியில் இருந்தனர் என்றும் எனினும் எந்தவித பாதிப்பும் இன்றி சிறுவர்கள் காப்பாற்றப்பட்டனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .