2025 ஜூலை 07, திங்கட்கிழமை

தொண்டமானின் பெயர் நீக்கம்; எதிர்த்து ஆர்ப்பாட்டம்

மு.இராமச்சந்திரன்   / 2017 ஒக்டோபர் 25 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

 

ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி  நிலையத்தின் பெயர் பலகையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்கள், இன்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்படி நிலையத்தின் பெயரானது, பூல்பேங்க் தொழில் பயிற்சி நிலையம் என மாற்றப்பட்டுள்ளதுடன், சௌமியமூர்த்தித் தொண்டாமனின் உருவப்படமும் அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் உட்பட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்  உறுப்பினர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிற்பயிற்சி நிலையத்துக்குச் செல்லும் பிரதான பதையை மறித்து மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக, குறித்த பகுதிக்கான போக்குவரத்துத் தடைப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வருகைத்தந்த ஹட்டன் பொலிஸார், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரியத் தீர்வை பெற்றுக்கொடுப்பதாக. உறுதியளித்ததைத் தொடர்ந்து,  ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .