2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தொப்பிகல முதலைக்குட்டிகள் கண்டியில் நீந்தின

R.Maheshwary   / 2021 ஒக்டோபர் 04 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேஹ்ன் செனவிரத்ன

கண்டி- குடாரவத்த வீதியில் நடத்திச் செல்லப்படும் கட்டட பொருள் விற்பனை நிலையத்துக்கு, தொப்பிகல பகுதியிலிருந்து மணல் கொண்டு வந்த லொறிக்குள், இரண்டு முதலைக்குட்டிகள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த லொறியிலிருந்து மணல் இறக்கும் போதே, முதலைக் குட்டிகள் இரண்டும் வெளியே வந்துள்ளதுடன், லொறியில் மணலை ஏற்றும் போது பல முதலை முட்டைகள் இருந்ததாகவும், அவற்றை மணல் ஏற்றிய பிரதேசத்திலேயே அகற்றியதாகவும் லொறியின் சாரதி தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த முதலைக் குட்டிகள் மணலில் மறைந்திருந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்த நிலையில், இரண்டு முதலைக் குட்டிகளையும் கண்டி நகருக்கு நீரை விநியோகிக்கும் துனுமடலாவ வாவியில் விடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

எனினும், குடிநீரைப் பெறும் குறித்த வாவியில் முதலைக் குட்டிகளை விடுவித்தமை தொடர்பில் கண்டி மாநகர  சபையின் நகர ஆணையாளர் அமில நவரத்னவிடம் வினவியபோது, அவ்வாறான சம்பவம் தொடர்பில் தனக்கு எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. என தெரிவித்த அவர், அது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .