2026 மே 01, வெள்ளிக்கிழமை

தொலைபேசி கம்பம் உடைந்து விழுந்ததில் போக்குவரத்துப் பாதிப்பு

Editorial   / 2019 பெப்ரவரி 05 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா, ரஞ்சித் ராஜபக்ஷ

 

நோர்வூட் - தியசிறிகம பகுதியில், இன்று (5) காலை தனியார் பஸ்ஸொன்றின் மீது, தொலைபேசி இணைப்புக் கம்பமொன்று முறிந்து விழுந்ததில், பஸ் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

பொகவந்தலாவயிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸின் மீதே, தொலைபேசி கம்பம் முறிந்து விழுந்துள்ளது.

இச்சம்பவத்தில், பஸ்ஸிலிருந்த பயணிகளுக்கு எவ்வித ஆபத்துகளும் ஏற்படவில்லை என்றும் எனினும் பஸ் பகுதியளவில் சேதமடைந்துள்ளதெனம் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் தொலைபேசி இணைப்புக் கம்பத்தை அப்புறப்படுத்தும்வரை, மேற்படி வீதியில் ஒருவழி போக்குவரத்தே முன்னெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .