Editorial / 2019 பெப்ரவரி 07 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையக சம்பள பிரச்சினையைப் பற்றி பேச எம்மிடம் தொழிற்சங்க பலம் இல்லாவிட்டாலும், அரசியல் பலம் மூலம் வெற்றிப்பெறுவோம் முடியாவிட்டால் பதவி துறப்போம் என தெரிவித்த, அமைச்சர் பழனி திகாம்பரம் அரசியல் பதவிகளை பணயம் வைத்து தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்காக அரசியல் பேரம் பேசுவதாகத் தெரிவித்தார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (7) மலையக அபிவிருத்தி அதிகாரசபையின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மலையக மக்களின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்காகவே இவ் அதிகாரசபை உருவாக்கப்பட்டது. எனினும் பெருந்தோட்ட மக்களின் சம்பள விடயத்தில் எமது அமைச்சுப் பதவிகளை நாம் பணயம் வைத்து அரசியல் பேரம் பேசும் விடயங்களை முன்னெடுத்து வருகின்றோம் எனவே நாளையே எமது பதவி எம்மை விட்டுப்போகலாம். பரவாயில்லை நாம் இல்லாவிட்டாலும் எம்மால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இவ்வேலைத்திட்டங்களை எமக்கு பின்னால் வருபவர்கள் சிறந்த முறையில் கொண்டு செல்ல வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு என்றார்.
8 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
56 minute ago
1 hours ago