Editorial / 2019 செப்டெம்பர் 13 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு அனைத்துவிதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியினால் ஏற்பாட்டில், ' தொழில் புரியும் மக்களின் சந்திப்பு' எனும் தொனிப்பொருளிலான மக்கள் சந்திப்பு, கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நேற்று (12) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், தோட்டத் தொழிலாளர்களின் சமூக வாழ்க்கை கீழ் மட்டத்தில் உள்ளதெனச் சுட்டிக்காட்டியதுடன், மந்தபோஷணை, இரத்தச் சோகையால், நிறைகுறைந்த பிள்ளைகளுடன், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களாக, தோட்டத் தொழிலாளர்களே விளங்குகின்றனர் என்றும் தெரிவித்தார்.
ஆனால் அவர்களின் உழைப்பு இன்று நாட்டின் அன்னியச் செலாவனியில் முக்கியப் பங்கை வகிப்பதாகவும் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் இன்று கொழும்பில் அடிமைகளாகத் தொழில்புரிகின்றனர் என்றும் அவர்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க முடியும் என்று உத்தரவாதம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தொழலாளர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தி, இந்நாட்டின் சமாந்தர பிரஜைகளாக, அனைத்து உரிமைகளும் அனுபவிக்கின்ற மக்களாக அவர்களை அங்கிகரிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago