2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

தொழிலாளர்களைத் தாக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 30 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


தோட்டத் தொழிலாளர்களை தாக்குவதற்கு எந்த பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் அல்லது
முகாமைத்துவ அதிகாரிகளுக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ள
பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ், தாக்கியவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை
எடுக்கப்படும் என்றார்.

தலவாக்கலை பிரதேசத்தில்  மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பெனியின்  கீழ் இயங்குகின்ற பெரிய கட்டுகலை தோட்டத்தில் தோட்ட, அதிகாரி மற்றும் உத்தியோகஸ்தர்கள் இருவர் தோட்டத்தில் கொழுந்து பறிக்கும் பெண்கள், இருவரை  தாக்கியதால், குறித்த இரு பெண்களும்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளார்கள்.

இந்த நிலையில், இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகத் தெரிவித்துள்ள அவர்,
தொடர்ந்தும் தொழிலாளர்கள் தாக்கப்படுவதை ஜீரணித்துக் கொள்ள முடியாது . தொழில்
பிணக்குகள் தொழிலாளர் முகாமைத்துவம் விடயங்களில் தொழிற்சங்கங்களை புறக்கணித்த
பெருந்தோட்ட நிறுவனங்கள் இன்று நேரடியாக தொழிலாளர்களை தாக்குவதற்கு முற்பட்டு
இருக்கின்றார்கள்.

குறிப்பாக  பெண் தொழிலாளர்களை   தாக்கியது முற்றுமுழுதாக மனித உரிமை மீறிய
நிலைப்பாடாகவே தான் கருதுவதாகவும் . இவ்விடயம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தயாராக இருக்கின்றது என்றார்.

அத்துடன்,  எதிர்வரும் காலங்களில் இவ்வாறான நிலைமை ஏற்படும் எனின், ஒட்டுமொத்த
மலையகத்தையும் ஒன்றுதிரட்டி போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X