Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஓகஸ்ட் 23 , பி.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
தொழிலாளி ஒருவரை, தோட்ட அதிகாரி தாக்கியதைக் கண்டித்து, நாவலப்பிட்டி கலபொட தோட்டத் தொழிலாளர்கள், தோட்டத்தின் பழைய தொழிற்சாலைக்கு முன்பாக, இன்று மதியம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தோட்டத் தொழிலாளி ஒருவர் வளர்த்து வந்த பசுவொன்று, தோட்ட அதிகாரி குடியிருக்கும் விடுதி வளாகத்திலுள்ள புற்களை மேய்ந்துள்ளது. இதனைக் கண்ட தோட்ட அதிகாரி, தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளியை அழைத்து, பசுவை தனது விடுதிக்கு அருகில் கட்டி வைக்குமாறு பணித்துள்ளார்.
தோட்ட அதிகாரியின் பணிப்புரைக்கு அமைவாக, குறித்த தொழிலாளி, கால்நடையை விடுதிக்கு முன்பாக கட்டி வைத்துள்ளார். எனினும், கால்நடையின் உரிமையாளர் தோட்ட அதிகாரிக்கோ, குறித்த தொழிலாளிக்கோ அறிவிக்காமல் கால்நடையை அவிழ்த்துக் கொண்டுச் சென்றுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தோட்ட அதிகாரி, குறித்த தொழிலாயை தாக்கியுள்ளதாக தெரியவருகிறது.
இதனையடுத்து, தாக்குதலுக்கு உள்ளானவர், தோட்ட அதிகாரி தன்னை தாக்கியதாகக் கூறி நாவலப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதுடன், நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தோட்ட அதிகாரியின் இந்த செயல்பாட்டைக் கண்டித்தும், அவரை உடனடியாக கைதுசெய்ய வேண்டுமென்று கோரியுமே, தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
36 minute ago
20 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
20 Jul 2025