Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 பெப்ரவரி 08 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
பதுளை மாவட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நன்மை கருதி, தொழில் நீதிமன்றமொன்றை ஹப்புத்தளையில் அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மடூல்சீமை, லுணுகலை, கந்தகெட்டிய, எல்ல மற்றும் பள்ளக்கட்டுவை ஆகிய பிரதேசங்களில் நடமாடும் தொழில் நீதிமன்றங்களை இயங்க வைக்கவும், கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், நீதி அமைச்சின் பிரதம செயலாளருக்கு அனுப்பியுள்ள அவசரக் கடிதமொன்றிலேயே, மேற்கண்ட கோரிக்கைகளை விடுத்துள்ளார்.
,பதுளை மாவட்டத்தில் பதுளை, பண்டாரவளை ஆகிய இடங்களில் தொழில் நீதிமன்றங்கள் காணப்படுகின்றன. இந் நீதிமன்றங்களில் தொழில் வழக்குக் கோவைகள் நிறைந்து காணப்படுவதால், வழக்குகள் நிறைவுக்கு கொண்டுவருவதற்கு கால தாமதங்கள் ஏற்படுகின்றன. இதனால் வழக்குத் தொடுனர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளனர்.
ஆகவே, இக்கால தாமதங்களை தவிர்க்கும் முகமாக ஹப்புத்தளையில் தொழில் நீதிமன்றமொன்று ஏற்படுத்தப்பட வேண்டியது, மிகவும் அவசியமாகுமென அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
38 minute ago
20 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
20 Jul 2025