Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2023 பெப்ரவரி 28 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
களனிவெளி, தலவாக்கலை மற்றும் ஹொரனை ஆகிய பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் நிர்வகிக்கப்படும் தேயிலைத் தோட்டங்களில் 60 வயதை பூர்த்தி செய்த சிரேஸ்ட உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு, குறித்த நிறுவனங்களின் முகாமைத்துவ பணிப்பாளர் ரொசான் ராஜதுரை தலைமையில் நேற்று (27) ஹட்டனில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வின் போது, களனிவெளி, தலவாக்கலை மற்றும் ஹொரனை ஆகிய பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழுள்ள தோட்டங்களில் சேவையாற்றி சிரேஸ்ட உத்தியோகத்தர்களை தெரிவு செய்து அவர்களுக்கான கௌரவிப்பும் பரிசுகளும் வழங்கப்பட்டன.
இதன்போது கருத்து தெரிவித்த குறித்த நிறுவனங்களின் முகாமைத்துவ பணிப்பாளர் ரொசான் ராஜதுரை தேயிலைத் தொழிற்றுரையை இலாபமிக்க துறையான நடத்திச் செல்ல தோட்டத் தொழிலாளர்களைப் போல அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் பங்கும் அளப்பரியது.
எனவே அவர்களை கௌரவிப்பதன் ஊடாக தேயிலைத் தொழிற்றுரையை மேலும் சிறப்பாக கொண்டு நடத்தலாம் என்றார்.
இந்த உத்தியோகத்தர்கள் போலவே தோட்ட அலுவலக பணியாளர் குழாமும் தமது நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு உரிய பங்களிப்பை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago