Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 பெப்ரவரி 01 , மு.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி பெருமாள், காமினி பண்டார
தமது சங்க உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் நியாயத்தை நிறைவேற்றுமாறும் கோரி, இலங்கை தோட்டத் சேவையாளர் சங்க உறுப்பினர்களால் மஸ்கெலியாவில் அமைதி போராட்டம் நேற்று (31) முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை தோட்டத் சேவையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில், ஹட்டன்- மஸ்கெலியா பிரதான வீதியின் மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு முன்பாக நேற்று (31) காலை9.45 மணியளவில் அமைதி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தோட்ட சேவையாளர்கள் தமது கடமை நேரங்களில், தேயிலைத் தோட்டங்களுடன் தொடர்புபடாத வெளி நபர்களாலும், தாம் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்களாலும் தாக்குதலுக்கு இலக்காகின்றமை அதிகரித்துள்ளமையால், தமது சேவையாளர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துமாறும் அச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அண்மையில் கிலண்டிலென்ட் தோட்ட சாரதியொருவர், அதே தோட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவரால் 29ஆம் திகதி தாக்குதலுக்கு இலக்கானமையை அடிப்படையாக வைத்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் ஹட்டன் வலய தலைவர் எஸ். சிவராஜ், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
4 hours ago
5 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
19 Jul 2025