Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Kogilavani / 2017 ஒக்டோபர் 31 , பி.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்
பத்தனை போகாவத்தை தோட்டத்தில், அம்பியுலன் வண்டி உள்ளிட்ட வசதிகள் இல்லாமை காரணமாக, பெண் தொழிலாளி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளாரென்றும் தோட்ட நிர்வாகத்தின் அசமந்தப்போக்கே இதற்குக் காரணமென்று கூறியும் மேற்படித் தோட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள், தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக, இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தோட்ட நிர்வாகத்தால் பாண் வழங்கப்பட்டுள்ளது. அதனை பெண் தொழிலாளியொருவர் உட்கொண்டார்.
அதிலொரு துண்டு, அந்த பெண்ணின், தொண்டையில் இறுகியதால், அப்பெண் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
மேற்படித் தோட்டத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான எம்.தனலெட்சுமி (வயது 59) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் உயிரிழந்தமைக்கு தோட்ட நிர்வாகமே காரணமெனக் கூறியே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
“தோட்டத்தில் மேலதிகக் கொழுந்து பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பெண்களுக்கு, தோட்ட நிர்வாகத்தால் பாண் வழங்கப்பட்டுள்ளது.
“இவ்வாறு வழங்கப்பட்ட பாணை உட்கொண்ட மேற்படி பெண்ணின் தொண்டையில் பாண் இறுகியதால், அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரை நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் வழியியிலேயே உயிரிந்துவிட்டாரென தெரிவிக்கப்படுகிறது.
போகாவத்தை தோட்டத்தில் அம்புயுலன்ஸ் வண்டி இல்லாததன் காரணமாக, குறித்த நேரத்தில் பெண்ணை நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்ல முடியவில்லை என்றும், இதனாலேயே அவர் உயிரிழந்துள்ளாரென்றும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
எனவே, இச்சம்பவத்துக்கு முழு பொறுப்பையும் தோட்ட நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி தொழிலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
06 Jul 2025