Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
R.Maheshwary / 2022 ஜூன் 21 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
"தோட்ட மக்களுக்கு விசேட பொருள் விநியோக வழிமுறையும் நிவாரண திட்டமும் முன்வைக்கப்பட வேண்டும்." என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.
இன்று நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கின்றது. எரிபொருள் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது.
இந்நிலைமை நாட்டின் அனைத்து துறைகளின் செயற்பாட்டையும் ஸ்தம்பிதம் அடைய செய்திருக்கின்றது. குறிப்பாக பொருள்களின் தட்டுப்பாடு ஒருபக்கம் இருக்க, கிடைக்கப்பெறும் பொருள்களின் விநியோகம் முற்றாக தடைப்பட்டிருக்கின்றது.
வழமையான நாட்களிலேயே முறையான விநியோக வழிமுறையில்லாத தோட்ட பகுதிகள், பெருமளவு பாதிப்பிற்குள்ளாகி இருக்கின்றன. இச்சூழ்நிலையில் உடனடியாக தோட்ட மக்களுக்கு விசேட பொருள் விநியோக வழிமுறையும் நிவாரண திட்டமும் முன்வைக்கப்பட வேண்டும்.
அத்தியாவசிய பொருள்களுக்கான தட்டுப்பாடு மிக மோசமான நிலையில் இருப்பதால், தோட்ட மக்களை பாதுகாக்க விசேடமான நிவாரண திட்டமொன்று உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
எனவே, அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடி மலையக மக்களுக்கென தனியான நிவாரண திட்டமொன்றை முன்னெடுத்தல் வேண்டும். அவ்வாறு இல்லாத நிலையில் பாராபட்சத்திற்கு மத்தியில் மிக மோசமான பாதிப்பை மலையகத்தின் தோட்ட மக்கள் எதிர்கொள்ள வேண்டி ஏற்படும்.
இன்றைய அரசாங்கத்திற்கு எமது மக்களின் வாக்குகளை பெற்றுக்கொடுத்தவர்கள் "அரசில் இருந்து வெளியேறிவிட்டோம்" என கூறி தம்மை காப்பாற்றிக்கொள்ள முடியாது. இன்றைய அனைத்து நிலைமைகளுக்கும் இவர்கள் பொறுப்பு கூற வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago