Editorial / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ சண்முகநாதன், எம்.கிருஸ்ணா
நுவரெலியா மாவட்ட அரச வைத்தியசாலைகள் சிலவற்றில், அரசாங்க வைத்தியர்களிடம் மாத்திரமே சிகிச்சை பெறவேண்டும் என்ற வகையில் தொங்கவிடப்பட்டுள்ள பதாதைகளை உடனடியாக அகற்றுமாறு, மாவட்ட சுகாதாரப் பணிப்பாளருக்கு, நுவரலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்தே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் கருத்துரைத்துள்ள அவர், பெருந்தோட்டப்பகுதியின் சுகாதார முறைமை, பெருந்தோட்டக் கம்பனிகளால் நிர்வகிக்கப்படும் தோட்ட வைத்திய உதவியாளர்களாலேயே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதை மாற்றி அமைத்து, அந்த முறைமையை அரச பொது சுகாதார முறைமைக்குள் கொண்டு வருவதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் தங்களது மேற்பார்வைக் குழுவில், அதன் நடைமுறை வடிவத்தை தீர்மானிக்கும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று, இறுதி அறிக்கை, திங்கட்கிழமை (16), சுகாதார அமைச்சருக்கு கையளிக்கப்படவுள்ளது என்றும் கூறினார்.
எனவே, விரைவில் பெருந்தோட்ட சுகாதார முறைமை, அரச மயமாகும் என்றும் இறுதி தீர்மானம் நிறைவேற்றப்படும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்றும் தெரிவித்ததுடன், இது மலையக மக்களை, தேசிய நீரோட்டத்தில் இணைக்கும் மிகமுக்கிய அடைவுகளில் ஒன்றாகும் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், நுவரலியா மாவட்ட அரச வைத்தியசாலைகள் சிலவற்றில், அரச மருத்துவர்களிடம் மாத்திரமே சிகிச்சை பெறவேண்டும் என்ற வகையில், பதாதைகள் தொங்கவிடப்பட்டுள்ளதாகவும் அது தோட்ட மருத்துவ அதிகாரிகளை மலினப்படுத்தும் செயல் என்றும் தெரவித்ததுடன், இது தொடர்பில், தோட்ட மருத்துவ அதிகாரிகளிடம் இருந்து முறைப்பாடு கிடைக்கப்பெற்றது என்றும் கூறினார்.
இதையடுத்தே, இது தொடர்பாக நுவரலியா மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் தலகலவுடன், ஞாயிற்றுக்கிழமை (15) அலைபேசியில் தொடர்புகொண்டு, இந்தபட பதாகைகளை அகற்றுமாறு உத்தரவிட்டதாகவும் அவர் கூறினார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago