Editorial / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
பெருந்தோட்ட சுகாதார முறைமை, தேசிய சுகாதார முறைமைக்குள் உள்வாங்கும் தீர்மானம் உறுதியானபோதும், தோட்ட மருத்துவ உதவியாளர்கள், தமது சேவைக்காலம் முடியும் வரை தொடர்ந்து பணியாற்றும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சுகாதாரம் மனித நலனோம்பு, சமூக வலுவூட்டல் துறைகளின் நாடாளுமன்ற மேற்பார்வை குழுவின் தலைவருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குழு அறையில், நேற்று (16) தனது தலைமையில் நடைபெற்ற குழுக்கூட்டத்திலேயே, இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சு, பெருந்தோட்ட அமைச்சு, காணி அமைச்சு, மாகாண சபைகள் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சு, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் என்பவற்றின் அதிகாரிகளை ஒன்றிணைத்து தயாரிக்கப்பட்ட இந்தக் குழு, அறிக்கையையும் பரிந்துரைகளையும் சுகாதார அமைச்சருக்கு, நாளை (18) சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, இது தொடர்புடைய முழுமையான அறிக்கை, எதிர்வரும் வாரங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago