செ.தி.பெருமாள் / 2018 மார்ச் 19 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா பிளான்டேசனுக்கு உரித்தான, மஸ்கெலியா மறே தோட்ட முகாமையாளர், அங்கு பணிபுரியும் ஊழியர்களைத் தாக்குகின்றார் என, தொழிலாளர்களால் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம், காரியாலய உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, 2 நாட்கள் சிகிச்சை பெற்றுள்ளாரெனத் தெரிவிக்கப்படுகிறது. இது விடயமாக, நல்லதண்ணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதன் அடிப்படையில், தோட்ட முகாமையாளரைக் கைதுசெய்த பொலிஸார், சில மணி நேரங்களிலேயே விடுதலை செய்துள்ளனர்.
இந்நிலையில், இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகத் தெரிவித்த தோட்ட உத்தியோகத்தர்கள், இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளாத பட்சத்தில், போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக எச்சரித்துள்ளனர்.
22 minute ago
30 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
30 minute ago
2 hours ago