Kogilavani / 2017 ஓகஸ்ட் 15 , பி.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}


“பெருந்தோட்டங்களிலுள்ள உள்ளக வீதிகள், அபிவிருத்தி செய்யப்படாததால், தோட்ட மக்கள் பல்வேறு, பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதைக் கருத்திற்கொண்டே, எனது அமைச்சின் ஊடாக, ஊவா மாகாணத்துக்கு உட்பட்ட தோட்டப் பாதைகளை அபிவிருத்திச் செய்து வருகின்றேன்” என்று, ஊவா மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் புனரமைக்கப்பட்ட கவரகலை தோட்ட பழைய பிரிவுப் பாதை, மக்களின் பாவனைக்காக, இன்றுக் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.
மலையக மக்களின் அபிவிருத்திக்காக, எதிர்காலத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும், அவர் இதன்போது கூறினார்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026