Editorial / 2019 ஜூன் 19 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், ஆர்.ரமேஸ்
தலவாக்கலை - சென்.கிளயர், ஸ்டேலின் தோட்டத்தில், இன்று (19) பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில், 10 தொழிலாளர் குடியிருப்புகள் தீக்கிரையாகியுள்ளன.
இதில் ஓரிரு வீடுகள் முற்றாகவும் சில வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 5 குடும்பங்களைச் சேர்ந்த 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஸ்டேலின் தமிழ் வித்தியாலயத்தில், தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தீ விபத்துக்கான காரணம் இதுவரைக் கண்டறியப்படவில்லை என்றும் தலவாக்கலை பொலிஸார், நுவரெலியா பொலிஸ் கைரேகை அடையாளப் பிரிவுடன் இணைந்து, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
43 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
3 hours ago