2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தோட்டங்களில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 02 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத்.எச்.எம்.ஹேவா

பெருந்தோட்டப் பெண்களில் ஆகக் கூடுதலானவர்கள் வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்லும் நிலையில், தோட்டப் புறங்களில் பெண் பிள்ளைகள் பாரிய துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகி வருவதாக ப்ரொடக்ட் அமைப்பின் உப தலைவர் கே. மைதிலி தெரிவித்துள்ளார்.

ஹட்டனிலுள்ள ப்ரொடக்ட் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

தற்போது பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இடையே நிலவும் கடுமையான பொருளாதாரப் பிரச்சினைகளினால், பெருந்தோட்டப் பெண்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதால், தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் பல்வேறு வன்முறைகளுக்கு ஆளாகி வருகின்றனர் என்றார்.

 வெளிநாடுகளுக்குச் செல்லும்  பெண்களின் பெண் பிள்ளைகள்  தந்தை, தாத்தா, சகோதரர்களினால் பலவிதமான வன்கொடுமைகளுக்கு ஆளாகும் வாய்ப்புகள் அதிகம். தோட்டங்களில் சில இளம் பெண்கள் தங்கள் தந்தை, தாத்தா மற்றும் சகோதரர்களால் கர்ப்பம் தரித்த நிகழ்வுகளும் பதிவாகியுள்ளன.

அவை மட்டுமன்றி ஹோட்டல்கள், வீடுகளில் பெருந்தோட்ட சிறுவர்கள் பணியாளர்களாக  சேரும்  எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X