2026 மே 02, சனிக்கிழமை

‘தோட்டத் துறைக்காக ஜே.வி.பியே குரல் கொடுத்தது’

Editorial   / 2019 மார்ச் 19 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரா.யோகேசன் 

1,000 ரூபாய் சம்பளப் போராட்டத்துக்கு, நாடாளுமன்றத்திலும் வெளியேயும் தங்களதுகட்சி குரல் கொடுத்ததென்றுத்  தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத், தொழிலாளர்களின் வாழ்வாதார அடிப்படையிலான பிரச்சினைகளுக்கும், தங்களது கட்சியே போராட்டம் நடத்தியது என்றும் கூறினார். 

மக்கள் விடுதலை முன்னனியின் நுவரெலியா, மஸ்கெலியாத் தொகுதி அதிகார சபை மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல், “நாட்டை வெல்லவைக்கும் சவாலுக்கு நாம் ஆயத்தம்” எனும் தொனிப்பொருளில், நேற்று முன்தினம் (17), நடைபெற்றது.  

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,  

நாட்டிலுள்ள எந்தப் பகுதியிலுள்ள மக்களாயினும், எந்தவொரு பாகுபாடுமின்றி, அவர்களது உரிமைக்காகப் போராடும் கட்சியாக, தங்களது கட்சி உள்ளது என்றும் தங்களது கட்சி, கிராம, நகர மட்டத்தில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் கூறினார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .