2024 மே 08, புதன்கிழமை

தோட்டத் தொழிலாளர்களின் இருப்பு கேள்விக்குறியாகியுள்ளது

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 22 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா, ராமு தனராஜா

எதிர்வரும் காலங்களில் பெருந்தோட்ட காணிகள் வெளியாட்களால் ஆக்கிரமிக்கப்படுமாயின், அதை நிறுத்தி அந்தந்த தோட்ட இளைஞர் யுவதிகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்க தான் தயார் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

பசறை -கோணகலை பிலானிவத்தை பெருந்தோட்ட காணி வெளியாட்கள் ஆக்கிரமிப்பு
செய்யப்படுவது சம்பந்தமாக, மக்களை சந்திக்கச் சென்ற போதே, மேற்கண்டவாறு
தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், “பரம்பரை பரம்பரையாக பெருந்தோட்ட காணிகளை பாதுகாத்து வந்த, பெருந்தோட்ட மலையக தொழிலாளர்களே நாட்டினுடைய பொருளாதாரத்தின் வளர்ச்சியின் பெரும் பங்குதாரர்கள்.

இருப்பினும் அவர்களின் இருப்பு தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருக்கின்றது. ஒரே நாடு ஒரே சட்டம் என்றால் பெருந்தோட்ட மலையக மக்களும் இந்நாட்டினுடைய பிரஜைகள் என்பதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X