2025 மே 12, திங்கட்கிழமை

தோட்டத் தொழிலாளர்களுக்கு EPFக்கான உதவிக்கரம்

Gavitha   / 2020 ஒக்டோபர் 18 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜுன் மாதம் வரையிலான அரையாண்டுக்கான ஊழியர் சேமலாபநிதிக் கூற்று விவரங்களை, தொழில் தருநர்களுக்கு, மத்திய வங்கி அனுப்பிவைத்துள்ள நிலையில், இந்த அரையாண்டுக்கான கணக்குக் கூற்றுக்களை  பெறக்கூடிய வசதி, தொழிலாளர்களுக்கு கிட்டியுள்ளது என, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிர்வாக உபதலைவரும் சட்டசத்தரணியுமான கா. மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ​வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, 2019 ஜனவரி முதல் ஜுன் மாதம் வரையிலான அரையாண்டு கணக்கு விவரங்களை உறுதி செய்து கொள்ள முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்தக் கணக்குக் கூற்றுக்களை, தாங்கள் தொழில்புரியும் நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறும் கணக்குக் கூற்றுக்களில், தொழிலாளர்களது (பங்காளர்) பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், பங்களிப்புத் தொகை சம்பந்தமாக ஏதாவது திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின், அதற்கான படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து, மத்திய வங்கிக்கு அனுப்பி வைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விவரங்கள் தேவைப்படுவோர், இ.தொ.கா தலைமை அலுவலகம், மாவட்ட பிராந்திய காரியாலயங்களில் கடமைபுரியும் பிரதிநிதிகள், பிராந்திய இயக்குனர்கள் ஊடாக தோட்ட நிர்வாகங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவ்வாறு தொழிலாளர்கள் நேரடியாக மத்திய வங்கியுடன் தொடர்பு கொள்ள வேண்டுமாயின், 011-2206642, 011-2206690, 011-2206691, 011-2206692 ஆகிய இலக்கங்களின் ஊடாகவோ, 011-2206694 எனும் தொலைநகல் இலக்கத்தின் ஊடாகவோ, epthebdeskShcbsl.lk எனும் மின்னஞ்சல் முகவரியூடாகவோ தொடர்புகொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தவிர, அரையாண்டுக்கான கூற்றுக்கள் கிடைக்காதவர்கள் வேறு ஏதாவது பிரச்சினைகளை எதிர்நோக்குபவராயின், இது தொடர்பில், தங்களது தலைமைக் காரியாலயத் தொழிலுறவு இயக்குனர் எஸ். ராஜமணி: அலைபேசி இலக்கம் 0716875020 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X