2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில்...

Janu   / 2024 ஜூலை 11 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள 1700 ரூபாய் நாளாந்த சம்பளத்தை தோட்டத் தொழிலாளர்களுக்கு உடனடியாக வழங்க தோட்டக் கம்பனிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹட்டன் டிக் ஓயா தோட்டத் தொழிலாளர்கள் வியாழக்கிழமை (11) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட்ட நாளாந்தம் 1700 ரூபாய் சம்பளத்தை தமக்கு வழங்க தோட்ட கம்பனிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

நாட்டில் தற்போதைய நிலவும் பொருளாதாரத்துடன் தமக்குக் கிடைக்கும் சம்பளத்தில் வாழ சிரமம் எனவும், தோட்டக் கம்பனிகள், உயர் நீதிமன்றத்தால் பெறப்பட்ட தடை உத்தரவை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர் .


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X