Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2017 செப்டெம்பர் 12 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்டப் பிரதேசங்களில் வாழும் மக்கள், பிரதேச சபைகளுக்கு வாக்களிக்க முடியும். ஆனால், பிரதேச சபைகளால், தோட்டப் பிரதேசங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணியாற்ற முடியாது என்ற, சட்ட விதிக்கான திருத்தம், அமைச்சரவையில், நேற்று (12) ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் வலியுறுத்தலின்படி, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இதற்கான பத்திரத்தை, அமைச்சரவையில் நேற்று (12) சமர்பித்தார்.
இதன்மூலம், 1987 ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 33ஆம் பிரிவு திருத்தப்படுகிறது. இதையடுத்து, இது வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.
இது தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவருமாகிய அமைச்சர் பழனி திகாம்பரம் ஆகியோர் தனித்தனியாக ஊடக அறிக்கைகளை அனுப்பிவைத்துள்ளனர்.
அவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, கொழும்பு, காலி, மாத்தறை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பெருந்தோட்டப் புறங்களில் வாழும் மலையகத் தமிழ் மக்கள், பிரதேச சபை தேர்தல்களில் வாக்களிக்கலாம். பிரதேச சபை உறுப்பினர்களை வாக்களித்துத் தெரிவு செய்யலாம். பிரதேச சபைகளை உருவாக்கலாம். ஆனால், அவர்களது வாக்குகளால் உருவான பிரதேச சபைகள், தோட்டப் புறங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அபிவிருத்திப் பணிகளைச் செய்ய முடியாது என்ற பாராபட்சமான சட்ட விதி, 1987ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து இருந்து வந்ததாகும்.
கண்டி மாவட்டத்தில் பெருந்தோட்ட மக்களின் வாக்குகளால் அமைக்கப்பட்ட உடபளாத பிரதேச சபை, பல ஆண்டுகளுக்கு முன், இந்த பிரதேச சபை பெருந்தோட்ட பிரதேசங்களுக்கு அபிவிருத்திப் பணிகளை செய்ய நிதி ஒதுக்கீடு செய்தது என்ற குற்றஞ்சாட்டி, இந்த சட்ட விதியை பயன்படுத்தி கலைக்கப்பட்டது.
இந்த முப்பது வருட அநீதி வரலாறு இப்போது, தமிழ் முற்போக்குக் கூட்டணியால் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் நண்பர் பைசர் முஸ்தபா, இந்தப் பத்திரத்தை, அமைச்சரவையில் நேற்று (12) சமர்பித்தார்.
அதை அமைச்சரவை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. இந்தத் திருத்த நகல் விதியில் மேலும் சேர்க்கப்பட வேண்டிய சில திருத்தங்களை இரண்டாம் வாசிப்பின் போது சேர்த்துக்கொள்ளவும் அமைச்சரவை அனுமதிதந்தது ” எனக் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
25 minute ago
36 minute ago
41 minute ago