2026 மே 14, வியாழக்கிழமை

dd

தோட்டா, கஞ்சாவுடன் முன்னாள் இராணுவ வீரர் கைது

Editorial   / 2019 நவம்பர் 04 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எஸ்.கணேசன்

பூண்டுலோயா - கரஹாஹெடதென்ன பகுதியில், ​நேற்று (03) மாலை நடைபெற்ற திடீர் சுற்றிவளைப்பின் போது, ரி -56 ரக துப்பாக்கியின் தோட்டாக்கள், வெற்றுத்தோட்டாக்கள், ஏனைய துப்பாக்கிகளின் தோட்டக்கள் உள்ளிட்ட கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது என, பொலிஸார் தெரிவித்தனர்.

இவற்றை தன்வசம் வைத்திருந்த நபரொருவரும் கைது செய்யப்பட்டிருந்தார் என்றும் இவரிடமிருந்து, ரி - 56 ரக துப்பாக்கியின் 31 தோட்டாக்களும் 8 வெற்றுத் தோட்டாக்களும் 13 கிராம் கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளன.

6 வருடங்களுக்கு முன்னர், இராணுவக் கடமையில் இருந்து வெளியேறிய நபரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகினற்து.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .