Editorial / 2025 ஜூன் 18 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து, மலையகத்தில் சில பிரதேச சபைகளில் ஆதரவளித்து, தவிசாளர், உப- தவிசாளர் பதவிகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெற்று ஆட்சியமைத்துள்ளது,
இந்நிலையில், இந்த முடிவுக்கு இரு பக்க விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்டுள்ளன. அதில், தோழர் ஜீவன் தொண்டமான் என்றும் தோழர் செந்தில் தொண்டமான என்றும் குறிப்பிட்டள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவரான ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட அந்த சக்தியின் உறுப்பினர்களை தோழர் என்றே அழைக்கின்றனர். இந்நிலையில், ஜீவன் தொண்டமானையும் செந்தில் தொண்டமானையும் தோழர்கள் என்றே சமூக வலைத்தலங்கள் பலவற்றில் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், தேசிய மக்கள் சக்தியுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இணைந்து ஆட்சியமைக்கும் முடிவை அறிவித்த காங்கிரஸின் பொதுச் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், தேசிய மக்கள் சக்தியுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இணையவில்லை. ஆட்சியமைக்க முடியாத உள்ளூராட்சி மன்றங்களுக்கு பேரம் பேசி, ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சில சபைகளில் தவிசாளர், உப-தவிசாளர் பதவிகள் பெற்றுக்கொள்ளப்படும் என்றார்.
இந்நிலையில், காங்கிரஸின் பொதுச் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் எடுத்துள்ள இந்த அரசியல் முடிவை, மலையகத்தை சேர்ந்த பல தலைவர்களும் ஜீவனிடமிருந்து அரசியல் கற்றுக்கொள்ளவேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் பலரும் குறிப்பிட்டுள்ளனர்.
37 minute ago
2 hours ago
6 hours ago
01 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
2 hours ago
6 hours ago
01 Apr 2026