2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நிதியை திருப்பியனுப்பிய விவகாரம்: ‘உண்மை இல்லை’

Gavitha   / 2017 ஏப்ரல் 02 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட்  ஆஸிக்

“மத்திய மாகாண கல்வி அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட 990 மில்லியன் ரூபாய் நிதி, திருப்பி அனுப்பப்பட்டதாக வௌியாகும் செய்தியில் எவ்வித உன்மையும் இல்லை” என்று, மத்திய மாகாண முதலமைச்சரும் மாகாண கல்வி அமைச்சருமான  சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

கண்டி - பல்லேகலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“கடந்த வருடம், மத்திய மாகாண கல்விக்காக கிடைக்க வேண்டிய  6,000 மில்லியன் ரூபாவில், 300 மில்லியன் ரூபாய் மட்டுமே கிடைத்தது.

தேவையான பணம் கிடைக்காததால் கடந்த வருடம் கல்வியின் அபிவிருத்திக்காக செய்யப்பட்ட திட்டங்களில் 990 மில்லியன் ரூபாவுக்கான வேலைகள் இவ்வருடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது” என்றார்.

“சிரிமல்வத்த பாடசாலையின் கட்டடம் ஒன்றின் கூரை கடந்த 30ஆம் திகதி உடைந்து விழுந்தமை தற்செயலாக இடம்பெற்ற சம்பவம், தற்செயலாக இடம்பெற்றுள்ள ஒரு சம்பவம் என்பதால், இதன்பின்னர் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறாதிருக்க அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .