Kogilavani / 2015 செப்டெம்பர் 01 , மு.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆ.ரமேஷ்,எஸ். புஸ்பராஜ்,எஸ்.சுஜிதா
தலவாக்கலை நகரில் நான்கு கடைகளை உடைத்து அங்கிருந்த பொருட்களை திருடியதாக கூறப்படும் 15 வயது சிறுவனை தலவாக்கலை பொலிஸார் நேற்று திங்கட்கிழமை(31) கைதுசெய்துள்ளனர்.
தலவாக்கலை நகரிலுள்ள ஹோட்டல் மற்றும் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த 3 கடைகள் ஞாயிற்றுக்கிழமை (30) இரவு உடைக்கப்பட்டு, அங்கிருந்து பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், திங்கட்கிழமை (31) நுவரெலியா பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனை கைதுசெய்தனர்.
கைதான சிறுவனிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இச்சம்பவத்துடன் பலர் தொடர்புபட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த சிறுவனை, நுவரெலியா மாவட்ட நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago