2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

நீரில் முழ்கி சிறுவன் பலி; சகோதரி வைத்தியசாலையில்

Princiya Dixci   / 2016 ஜூன் 14 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெல்லவாய, தோரஅர கங்கையில் குளிக்கச் சென்ற 7 வயது சிறுவனொருவன், நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவமொன்று, இன்று செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்றுள்ளது என வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.

வெல்லவாய பகுதியைச் சேர்ந்த டி.எம். மதுசங்க என்ற சிறுவனே, இவ்வாறு உயிரிழந்தவனாவான்.

மேற்படி சிறுவன், தனது பாட்டி மற்றும் தங்கையுடன், கடந்த திங்களன்று தோரஅர கங்கையில் குளிச்சென்றுள்ளான். இதன்போது, வாவியில் குளித்துக்கொண்டிருந்த குறித்த சிறுவனும் சிறுமியும் நீரில் மூழ்கியுள்ளனர்.

இதனை கண்ட பிரதேவாசிகள், நீரிழ் மூழ்கியவர்களை மீட்டு தெஹிகஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், அச்சிறுவன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .