2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

நெல் உற்பத்தியில் நாடு தன்னிறைவு

Kogilavani   / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

'இலங்கை நெல் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளது. எதிர்வரும் 2016ஆம் ஆண்டு மே மாத காலப்பகுதிக்கு தேவையான நெல், கையிருப்பில் உள்ளது. நவீன தொழில்நுட்பம் கலந்த விவசாய உற்பத்தி காரணமாக இவ் வெற்றியை பெற்றுக்கொள்ள முடிந்தது' என விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரொஹான் விஜேகோன் தெரிவித்தார்.

'குரக்கன், சோளம், உருளைக்கிழங்கு போன்றவற்றின் தன்னிறைவை நோக்கி விவசாயத் திணைக்களம் அடுத்தகட்ட நகர்வை முன்னெடுத்துள்ளது' எனவும் அவர் கூறினார்.   

விவசாயத் திணைக்களத்தின் வருடாந்த விவசாய மகாநாடு நேற்று வியாழக்கிழமை (03) பேராதனை கன்னொருவ தாவர கரு மூலவள ஆராய்ச்சி நிலையத்தில் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில், விசேட பேச்சாளராக கலந்துக்கொண்ட சுவிட்சர்லாந்தின் சூரிச் பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி இமானுவெல் பிரசாத்  உரையாற்றுகையில்,

'சூழல்சார் பயிர்ச்;செய்கை, பசுமை புரட்சி, ஆகிய இரண்டும் இருவேறுபட்ட நோக்கங்களாக இருக்கின்றன. அதில் சமநிலைத் தன்மை பேணப்பட வேண்டும்.  

அத்துடன், கோட்பாட்டு ரீதியான விவசாயம், எய்த கூடிய விவசாயம், உண்மையான விவசாயம் ஆகிய மூன்று துறைகளுக்கும் இடையே பாரிய இடைவெளி காணப்படுகின்றன. அதிலும் சமநிலத்தன்மை பேணப்பட வேண்டும்' என மேலும்  கூறினார்.

இந்நிகழ்வில், வாழ்நாள் சாதனையாளர் விருதை, கலாநிதி கிரிஸ்தோபர் ராஜேந்திர பானபொக்கே சார்பாக அவரது மகளான ரேனுகா கொப்பேகடுவ பெற்றுக் கொண்டார்.

2015ஆம் ஆண்டுக்கான சிறந்த விவசாய ஆராய்ச்சியாளராக பீ.வீ.ஆர் புன்னியவர்தனவும், சிறந்த விவசாய உற்பத்தியாளராக செல்வி சகீலா பானுவும் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X