Kogilavani / 2017 ஏப்ரல் 06 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாவலப்பிட்டிய பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளதாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
நாவலப்பிட்டியவிலிருந்து தொலோஸ்பாக நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ், கோணவலபத்தன 5ஆம் மைல்கல் பிரதேசத்துக்கு அருகில் 300 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஏற்கனவே இருவர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இவ்விபத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 64 பேரில் 13 வயது மாணவனொருவன், இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
புதன்கிழமை பகல் இடம்பெற்ற இவ்விபத்தில், 64 பேர் காயமடைந்த நிலையில் கண்டி மற்றும் நாவலப்பிட்டிய ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில், குறுந்துவத்தை மேரிவில தோட்டத்தைச்சேர்ந்த கருப்பன் தியாக ராஜா ( வயது-58), நாவலப்பிட்டி அலுகொல்ல கிராமத்தைச்சேர்ந்த கியான் ரஸ்மிக்க (வயது-13) மற்றும் பாக்கிய ஜோதி (வயது 57) ஆகியோரே உயிரழந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்வர்களில் பலரது நிலைக் கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
33 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
45 minute ago