2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

நக்லஸின் ஒரு பகுதி விற்பனை?

Kogilavani   / 2017 மார்ச் 07 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திக அருண குமார

உலக மரபுரிமையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள, நக்லஸ் மலைத்தொடரின் ஒரு பகுதியை, வியாபார நடவடிக்கைக்கு விற்பனை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தேசிய வனங்களை பாதுகாக்கும் சங்கம்  குற்றம்சாட்டியுள்ளது.

எல்கடுவ மற்றும் அரசாங்க பெருந்தோட்டத்துக்குச் சொந்தமான ஒரு பகுதியே, இவ்வாறு விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், அச்சங்கத்தின் தலைவர் அதீக் நசீர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,

“விற்பனைக்காக ஒதுக்கப்பட்டுள்ள இந்நிலமானது, நக்லஸ் மலைத் தொடரின் பிற்பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலத்தில், துப்புறவு பணிகள் மற்றும் கட்டுமானப் பணிகளை முன்னெடுத்தால், அது நக்கில்ஸ் மலைத்தொடருக்கு, பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X