2025 மே 19, திங்கட்கிழமை

நகர சபைக்கு நிரந்தர செயலாளர் ஒருவரை நியமிக்குமாறு கோரிக்கை

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 01 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத்.எச்.எம்.ஹேவா

ஹட்டன்- டிக்கோயா நகரசபைக்கு நிரந்த செயலாளர் ஒருவர் இன்மையால் நகர சபையின் நிர்வாக நடவடிக்கையைப் போலவே பிரதேச அபிவிருத்தி செயற்பாடுகளும் உரிய முறையில் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என ஹட்டன்- டிக்கோயா நகரசபையின் தவிசாளர் சடையன் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

இதனால் பல அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போது தலவாக்கலை- லிந்துலை நகரசபையின் செயலாளருக்குப் பதிலாக பதில் செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வாராந்தம் ஓர் நாள் சபைக்கு வந்து நகர சபையின் பணிகளை முன்னெடுப்பவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆனால் நகர சபையின் பணிகளை வாரத்துக்கு இரண்டு நாட்களுக்கு மாத்திரம் முன்னெடுக்க முடியாதென்றும்  அவர் தெரிவித்துள்ளார்.

 எனவே, ஹட்டன்- டிக்கோயா நகர சபைக்காக நிரந்தர செயலாளர் ஒருவரை நியமிக்குமாறு, மத்திய மாகாண ஆணையாளருக்கு பல தடவைகள் தெரிவித்தும் இதுவரை நிரந்தர செயலாளர் ஒருவர் நியமிக்கப்படவில்லை என்றும் ஹட்டன்- டிக்கோயா நகரசபையின் தவிசாளர் சடையன் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X