2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

நகரசபை அலைக்கழிக்கிறது: சாரதிகள் குற்றச்சாட்டு

Kogilavani   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரவிந்து விராஜ் அபயசிறி

மாத்தளை நகரில் முச்சக்கரவண்டியை நிறுத்துமிடத்தில் வைக்கப்பட்டிருந்த  நிறுத்தற் பலகையை, மாத்தளை நகரசபை அகற்றியுள்ளமையால் தாம் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் நகரசபை தம்மை அலைக்கழிப்பதாகவும் முச்சக்கர வண்டிகளின் சாரதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மாத்தளை நகரசபையானது எவ்வித அறிவுறுத்தலும் இன்றி சனிக்கிழமை(05) குறித்த நிறுத்தற் பலகையை அகற்றியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சங்கத்தின் உறுப்பினர்கள் 500 பேர், மனு ஒன்றை கையளிப்பதற்காக திங்கட்கிழமை(7)  நகரசபைக்கு சென்றுள்ளனர். நகரசபையானது  அவர்களை செவ்வாய்க்கிழமை(08) வருமாறு திருப்பியனுப்பியுள்ளது.

இவ்விடயம் தொடர்பில், மாத்தளை நகரசபையின் ஆளுநர் அமில நவரத்தினவிடம் கேட்டபோது,  'நகரசபை அதிகாரிகள் மற்றுமொரு வேலை காரணமாக வெளியே சென்றிருந்தனர்.  முச்சக்கரவண்டிகள் சங்கத்தின் 3 உறுப்பினர்களை செவ்வாய்கிழமை(08) வருமாறு நாங்கள் அறிவித்திருந்தோம்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .